ETV Bharat / state

"ஜல் சக்தி அபியான்" விழிப்புணர்வு பேரணி !

நாமக்கல்: ’ஜல் சக்தி அபியான்’ சார்பில் நடைபெற்ற நீர் மேலாண்மை பணிகள் குறித்த விழிப்புணர்வு பேரணியில் 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தொடங்கி வைத்தார்

விழிப்புணர்வு பேரணி
author img

By

Published : Jul 10, 2019, 9:18 PM IST

நீர் மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "ஜல் சக்தி அபியான்" சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

விழிப்புணர்வு பேரணி
நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தொடங்கி வைத்தார். இதில் பாரம்பரிய நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குவோம், தண்ணீரே வாழ்க்கையின் உத்தரவாதம், மழைநீர் சேகரிப்பு மக்கள் பணி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர், அரசுத்துறை அலுவலர்கள் ஏந்திச் சென்று ஊர்வலமாக சென்றனர்.
இந்தப் பேரணியானது மோகனூர் சாலை, பிரதான சாலை, பூங்கா சாலை வழியாக சென்று மீண்டும் தொடங்கிய இடத்திலேயே நிறைவு பெற்றது. இப்பேரணியில் மகளிர் திட்ட அலுவலர் டாக்டர் மணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசுத்துறை அலுவலர்கள் என 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Intro:நாமக்கல்லில் ஜல் சக்தி அபியான் சார்பில் நடைபெற்ற நீர் மேலாண்மை பணிகள் குறித்த விழிப்புணர்வு பேரணியில் 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
Body:
நீர் மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஜல் சக்தி அபியான் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தொடங்கி வைத்தார். இதில், பாரம்பரிய நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குவோம், தண்ணீரே வாழ்க்கையின் உத்தரவாதம், மழைநீர் சேகரிப்பு மக்கள் பணி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர், அரசுத்துறை அலுவலர்கள் ஏந்திச் சென்று ஊர்வலமாக சென்றனர். இந்தப் பேரணியானது மோகனூர் சாலை, பிரதான சாலை, பூங்கா சாலை வழியாக சென்று மீண்டும் தொடங்கிய இடத்திலேயே நிறைவு பெற்றது. இப்பேரணியில் மகளிர் திட்டம் திட்ட அலுவலர் டாக்டர் மணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசுத்துறை அலுவலர்கள் என 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.