ETV Bharat / state

முகக்கவசம் அணியாமல் சென்றவர்கள் மூலம் 20 லட்ச ரூபாய் வசூல்!

நாமக்கல்: மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் வாயிலாக, ரூபாய் 20 லட்சம் கிடைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர்
author img

By

Published : Sep 30, 2020, 8:19 AM IST

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமாக ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசின் விதிமுறைகளை அனைவரும் கடைப்பிடிப்பதை கண்காணிக்க வேண்டும்.

விதிமுறைகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய், சுகாதாரம், நகராட்சி துறை அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் மெகராஜ், ”நாமக்கல் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் 1 கோடியே 1 லட்ச ரூபாய் மோசடி கண்டறியபட்டு, அதில் இதுவரை 86 லட்ச ரூபாய் பணம் வங்கி கணக்கில் இருந்து திரும்ப வசூல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையை வசூல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 4 வாரத்தில் கரோனா தொற்று சற்று அதிகரித்து வருகிறது. திருமண நிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சியில் குறைந்தளவே மக்கள் பங்கேற்க வேண்டும். இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

முகக்கவசம் அணியாமலும், அரசின் விதிமுறைகளை பின்பற்றாமலும் வெளியில் சுற்றியவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அவர்களிடமிருந்து அபராதமாக வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, காவல் துறை, உள்ளாட்சி துறை மூலம் 20 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தில் தினசரி 2, 300 முதல் 2, 500 கரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.