நாமக்கல் நகரின் மையப் பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு கோபுரங்கள் இல்லாமல் திறந்த வெளியில், ஒற்றைக் கல்லால் ஆன 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலை உள்ளது. ஆஞ்சநேயருக்கு, தினசரி பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு, நறுமணப் பொருட்களைக் கொண்டு அபிஷேகமும் சிறப்புப் பூஜைகளும் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் தீபாவளிப் பண்டிகையையொட்டி ஆஞ்சநேயருக்கு காலை முதலே அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் ஒரு லட்சத்து எட்டு வெற்றிலைகளாலும், ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களாலும், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
இதனைக்காண நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், வெளிநாட்டவரும் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: