ETV Bharat / state

மோகனூரில் தொடங்கிய கரும்பு அரவைப் பணிகள்! - மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டு கரும்பு அரவை பணி தொடக்கம்

நாமக்கல்: மோகனூரில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டு கரும்பு அரவை பணியை சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், எம்.பி ஏ.கே.பி.சின்ராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

sugar
author img

By

Published : Oct 12, 2019, 11:11 PM IST

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான அரவை பணி இன்று தொடங்கியது. இதனை நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், எம்.பி ஏ.கே.பி.சின்ராஜ் உள்ளிட்டோர் கரும்புகளை அரவை இயந்திரத்தில் இட்டு தொடங்கி வைத்தனர்.

இந்த வருடம் சுமார் 1.12 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஆயிரத்து 296 ஏக்கர் நடவு கரும்பும், 2 ஆயிரத்து 485 ஏக்கர் கட்டை கரும்பும் என மொத்தம் 3 ஆயிரத்து 781 ஏக்கர் இவ்வாலைப் பகுதியில் பதிவு செய்யப் பட்டுள்ளது. கடந்த 2018-2019 ஆம் ஆண்டு வறட்சியின் காரணமாக இந்த ஆலையில் 1.27 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டது.

இந்தாண்டு கரும்பு அரவை பணித் தொடக்கம்

ஆலை அரவைக்கு அனுப்பப்படும் கரும்பிற்கு மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கும் கிரையத் தொகை, கரும்பு கட்டுப்பாட்டுச் சட்டப்படி கரும்பு வெட்டி அனுப்பிய 14ஆவது நாள் அங்கத்தினர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும் என சர்க்கரை ஆலை அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நாமக்கல் தனியார் நீட் பயிற்சி மையத்தில் சோதனை!

Intro:மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டு கரும்பு அரவையை சட்டமன்ற உறுப்பினர் K.P.P.பாஸ்கர், பாராளுமன்ற உறுப்பினர் A.K.P.சின்ராஜ் ஆகியோர் அரவை பணிகளைத் தொடங்கி வைத்தனர்.Body:மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டு கரும்பு அரவையை சட்டமன்ற உறுப்பினர் K.P.P.பாஸ்கர், பாராளுமன்ற உறுப்பினர் A.K.P.சின்ராஜ் ஆகியோர் அரவை பணிகளைத் தொடங்கி வைத்தனர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இவ்வாண்டு அரவை பணி இன்று துவங்கிய நிலையில் அதனை நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், நாமக்கல் எம்.பி ஏ.கே.பி.சின்ராஜ் உள்ளிட்டோர் கரும்புகளை அரவை இயந்திரத்தில் துவக்கி வைத்தனர்.

இந்த அரவைப் பருவத்தில் சுமார் 1.12 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்காக 1296 ஏக்கர் நடவு கரும்பும் 2485 ஏக்கர் கட்டை கரும்பும் ஆக மொத்தம் 3781 ஏக்கர் இவ்வாலைப் பகுதியில் பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும், கடந்த 2018-19 ஆம் ஆண்டு கரும்பு அரவை பருவத்தில் கடும் வறட்சியின் காரணமாக இவ்வாலை 1.27 லட்சம் டன் கரும்பு அரவை செய்தது. ஆலை அரவைக்கு அனுப்பப்படும் கரும்பிற்கான மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கும் கிரையத் தொகை கரும்பு கட்டுப்பாட்டு சட்டப்படி கரும்பு வெட்டி அனுப்பிய 14வது நாள் அங்கத்தினர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும் என சர்க்கரை ஆலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.