ETV Bharat / state

’பிரதமரின் பாராட்டு எனக்கான மோட்டிவேஷன்’ - நெகிழும் மாணவி கனிகா! - பிரதமர் மோடி பாரட்டிய நாமக்கல் மாணவி

நாட்டிற்காக பணியாற்றும் பிரதமர் மோடி அவருடைய அலுவல்களுக்கிடையில் என் போன்ற மாணவர்களையும் கவனித்து பாராட்டுவது மிகப் பெரிய விசயம். இந்த மாதிரியான பிரதமர் நம் நாட்டை ஆளுவது கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கிறது என பெருமிதம் பொங்க பேசுகிறார், மாணவி கனிகா.

கனிகா
கனிகா
author img

By

Published : Jul 26, 2020, 3:57 PM IST

Updated : Jul 28, 2020, 11:56 AM IST

அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்காக பிரதமர் மோடி உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சியில் (மான் கி பாத்) தன்னைப் பற்றி குறிப்பிடுவார் என சற்றும் எதிர்பார்க்கவில்லை என பேச்சைத் தொடங்குகிறார், கனிகா. நடந்து முடிந்த 12ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ தேர்வில் 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்ற மாணவிதான் கனிகா. இவரைப் பாராட்டி இன்று (ஜூலை 26) மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.

இந்த உரையில், ‘நாமக்கல் பற்றி கேள்விப்படும்போது எனக்கு நினைவுக்குவருவது மிகப்பெரிய ஆஞ்சநேயர் கோயில்தான், ஆனால், தற்போது நாமக்கல் என்றாலே மாணவி கனிகாவின் பெயரும் சேர்ந்தே நினைவுக்குவருகிறது’ என்றார் பிரதமர் மோடி. இந்த பாராட்டை மாணவி கனிகா சற்றும் எதிர்பார்க்கவில்லை.

யார் இந்த கனிகா?

நாமக்கல் அடுத்துள்ள ஈ.பி. காலனி பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் எஸ்.கே.நடராஜன், ஜோதி தம்பதியின் இருமகள்களில் ஒருவர்தான் கனிகா. சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் பிரதமர் மோடி இவருக்கு தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். அதில், கனிகாவின் வெற்றியின் ரகசியம், எதிர்கால லட்சியம் என அனைத்தையும் கேட்டு தெரிந்துகொண்டார்.

இது குறித்து கனிகாவிடம் கேட்கையில்,” பிரதமர் மோடி என்னை அழைப்பார் என்று எதிர்பார்க்கவேயில்லை, குறிப்பாக, இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் அவர் குறிப்பிட்டு பேசுவார் என்பதை நான் கனவில்கூட நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால், தனது அலுவல்களுக்கிடையில் என்னை அழைத்து பேசினார். என்னைப் போன்ற மாணவர்களை அழைத்து பேசுவது மிகப் பெரிய விஷயம். இந்த மாதிரியான பிரதமர் நம் நாட்டை ஆளுவது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய கனிகா,” தேர்வில் 486 மதிப்பெண்கள் மட்டுமே கிட்டும் என எதிர்பார்த்தேன். ஆனால் 490 மதிப்பெண்கள் கிடைத்திருக்கிறது. பிரதமர் மோடியின் பாராட்டுதான் எனது அடுத்தடுத்த முயற்சிகளுக்கான உந்துதல்” என்றார்.

’பிரதமரின் பாராட்டு எனக்கான மோட்டிவேஷன்’ - நெகிழும் மாணவி கனிகா!

பிரதமர் மோடியுடன் பேசிய தருணத்தைக் குறித்து கேட்கும்போது, இடைமறித்து பேசத் தொடங்குகிறார் கனிகாவின் தந்தை நடராஜன். அவர் கூறுகையில், “நடுத்தர குடும்பத்தை சார்ந்த எங்கள் மகளிடம் இந்திய பிரதமர் பேசியது மறக்கமுடியாதது. ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. எனது வருமானத்தில் கனிகாவை படிக்க வைப்பது சிரமம்தான்; கனிகாவின் கல்விக்கு அவருடைய பள்ளியில் உதவித்தொகை அளித்தது உதவியாக இருந்தது. அடுத்து கனிகாவை அவளது சகோதரி போல மருத்துவத்துறையில் படிக்க வைக்க ஆசை” என்றார்.

கனிகாவின் சகோதரி ஷிவானி, நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்று மருத்துவம் படித்து வருகிறார். இதையும் பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பேசினார். மேலும் கனிகாவும் மருத்துவம் பயின்று ராணுவத்தில் மருத்துவராக சேவையாற்ற விரும்புவதையும் பாராட்டினார்.

ஏழை குடும்பத்தில் இருந்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் நாட்டிற்கு மகத்தான சேவை ஆற்ற முடியும் என தனது உரையில் பிரதமர் கூறியது, உண்மையில் நிதர்சனமான கள எதார்த்தம். மாணவி கனிகா அதற்கான பாதையில் முதலடி எடுத்துவைத்திருக்கிறார்!

இதையும் படிங்க: அன்று பிரதமர் மோடி பாராட்டு... இன்று ஐநா மாநாட்டில் உரை!

Last Updated : Jul 28, 2020, 11:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.