ETV Bharat / state

சாலைப் பணியைத் தொடங்கிவைத்த அமைச்சர் - சாலைப் பணிக்கான பூமி பூஜை

நாமக்கல்: சாலைப் பணிக்கான பூமி பூஜையை மின் துறை அமைச்சர் தங்கமணி தொடங்கிவைத்தார்.

minister thangamani starts road works in namakkal

author img

By

Published : Dec 3, 2020, 1:50 PM IST

நாமக்கல் நகராட்சிக்குள்பட்ட திருச்சி சாலையில் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்கும்விதமாக திருச்சி சாலையில் உள்ள நளா ஹோட்டலிலிருந்து வசந்தபுரம் வரை உள்ள இரண்டு வழிச்சாலையாக உள்ள நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டது.

இதற்காக 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, சாலைப் பணிகளுக்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. இதில் மின் துறை அமைச்சர் தங்கமணி, மாவட்ட ஆட்சியர் மெகராஜ், சட்டப்பேரவை உறுப்பினர் பாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணிகளைத் தொடங்கிவைத்தனர்.

பின்னர், சாலை விரிவாக்கப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என ஒப்பந்தாரரிடம் அமைச்சர் தங்கமணி கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: ’காவல் பணி போல் குடும்பமும் முக்கியம்’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.