நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சியை அடுத்துள்ள தாண்டாகவுண்டனூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தில் 350 உறுப்பினர்கள் உள்ள நிலையில் 600 லிட்டர் பால் தினசரி பால் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 7 லட்ச ரூபாய் வருமானத்துடன் இயங்கிய சங்கம், தற்போது முறையாக வாரவாரம் பணம்கூட தர முடியாமல் நஷ்டத்தில் இயங்குவதாக தற்போதுள்ள நிர்வாகத்தினர் கூறி வருவதாகக் கூறப்படுகிறது
இதனால், சங்க உறுப்பினர்கள் பால் கூட்டுறவுச் சங்கத்தில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்கக்கோரி பலமுறை அலுவலர்களுக்கு மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே உடனடியாக முழுமையாக விசாரணை நடத்தி சங்கத்திற்குப் புதிய செயலாளரை நியமனம் செய்யக்கோரி சங்க உறுப்பினர்கள், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்க துணைப் பதிவாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: பெரியார் சிலைக்கு காவி சாயம்; இந்து மக்கள் கட்சி தொண்டரை அலேக்காக தூக்கிய போலீஸ்!