நாமக்கல் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, குடியிருப்பு கட்டடம் ஆகியவை 270 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுவருகின்றன.
60 விழுக்காடு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மருத்துவக் கல்லூரிக்கு இரண்டாம் தளம் கட்டும் பணி அக்.29 இரவு நடைபெற்றது. கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்றபோது, அங்கிருந்த தூண் இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் பணியிலிருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உடனே அவர்கள் நாமக்கல், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதனைக் கண்டித்து இன்று (நவ. 02) நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
அப்போது மாணவர்கள் சரிந்த விழுந்த கட்டடத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்திட ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்திட வேண்டும், கட்டட சரிவிற்கு காரணமான சத்தியமூர்த்தி & கோ நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்துசெய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணியின்போது விபத்து