ETV Bharat / state

ஜூலை 1 முதல் வேலைநிறுத்தம்: டேங்கர் லாரிகள் சங்கம் அறிவிப்பு - லாரிகள் சங்கம் வேலைநிறுத்தம்

நாமக்கல்: ஜூலை ஒன்றாம் தேதி முதல் டேங்கர் லாரிகள் ஓடாது என தென்னிந்திய எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

lorry
author img

By

Published : Jun 22, 2019, 6:51 PM IST

தென்னிந்திய எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம், அதன் தலைவர் பொன்னம்பலம் தலைமையில் சேலம் ஏற்காட்டில் நடைபெற்றது. இதில் சுமார் 376 உறுப்பினர்கள் கலந்துகொண்டு தங்களின் குறைகளை சங்க நிர்வாகிகளிடம் எடுத்துரைத்தனர்.

இந்தக் கூட்டத்தின் முடிவில் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ‘எல்பிஜி டேங்கர் லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் எண்ணெய் நிறுவனத்திலிருந்து எரிவாயு சேமிக்கும் நிலையத்திற்கு செல்கிறது. தற்போது ஒப்பந்த அடிப்படையில் சுமார் 4,800 டேங்கர் லாரிகள் செயல்பட்டுவருகின்றன.

இருப்பினும் அனைத்து டேங்கர் லாரிகளுக்கும் எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தம் அளிக்கவில்லை. அதன் காரணமாக கடந்த எட்டு மாதங்களாக சுமார் 700 டேங்கர் லாரிகள் வேலையின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இதனால் அதன் உரிமையாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவது மட்டுமின்றி, வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில்கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் வேலையின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ள 700 டேங்கர் லாரிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.

இல்லையெனில் ஜூலை ஒன்றாம் தேதி காலை ஆறு மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயர்வு ஏற்படும் நிலையும் உருவாகியுள்ளது.

Intro:ஜூலை 1 காலை 6 மணி முதல் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் - தென்னிந்திய எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு Body:தென்னிந்திய எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டம் இன்று சேலம் ஏற்காட்டில் நடைப்பெற்றது. தலைவர் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சுமார் 376 உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை சங்க நிர்வாகிகளிடம் எடுத்துரைத்தனர்.

கூட்டமுடிவில் தென்னிந்திய எல்.பி.ஜி.டேங்கர் லாரிகள் உரிமையாளர்கள் சங்கத்தினர் வெளியிட்ட அறிக்கையில் எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் எண்ணெய் நிறுவனத்திலிருந்து எரிவாயு சேமிக்கும் நிலையத்திற்கு செல்கிறது. தற்போது ஒப்பந்த அடிப்படையில் சுமார் 4,800 டேங்கர் லாரிகள் செயல்பட்டுவருகிறது. இருப்பினும் அனைத்து டேங்கர் லாரிகளுக்கும் எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தம் அளிக்கவில்லை. அதன்காரணமாக கடந்த எட்டு மாதங்களாக சுமார் 700 டேங்கர் லாரிகள் வேலையின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுமட்டுமின்றி வங்கி வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாத சூழ்நிலை நிலவிவருகிறது. எனவே எண்ணெய் நிறுவனங்கள் வேலையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 700 டேங்கர் லாரிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கவேண்டும். இதுத்தொடர்பாக நாமக்கல்லில் கடந்த 20 அன்று நடைபெற்ற LPG சங்கத்தின் பொதுக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் மூன்று ஆயில் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு கிடைக்காமல் காத்திருப்பு பட்டியலில் உள்ள வாகனங்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு வழங்கவேண்டும். இல்லையெனில் வருகின்ற 01.07.2019 அன்று காலை 06 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்காரணமாக எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டால் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு நிலவும் மேலும் விலை உயரவும் வாய்ப்புள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.