நாமக்கல் மாவட்டம் சுங்கச்சாவடி உள்ள அருகே ஆட்டோ நகரில், மாநில லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் குமாரசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் "கடந்த 24.07.19 அன்று மத்திய அரசு கொண்டு வந்த மோட்டார் வாகன கட்டண உயர்வை வரவோலையாக அறிவித்துள்ளன. அதன்படி புது வாகனத்திற்கு 6500 ரூபாயிலிருந்து 20,000 ரூபாய் என 16 மடங்கு உயர்த்தி உள்ளன. வாகன புதுப்பிக்க 40 ஆயிரம் வரை உயர்த்தி உள்ளன. இந்த கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்.
அதே போல 15 வருடத்திற்கு மேலான வாகனத்தை அடியோடு முடித்துக் கட்டும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. ஆறு மாதத்திற்கு ஒருமுறை வாகனங்களுக்கு எப்சி எடுத்து வருகிறோம். இந்நிலையில் இந்த முடிவை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்றார். ஏற்கனவே டீசல் விலை உயர்வால், லாரி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் சுங்கச் சாவடி கட்டணத்தை வருடத்திற்கு ஒருமுறை பெற வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.
மேலும், மத்திய அரசு எங்களது கோரிக்கையை ஏற்கவில்லை. தற்போது சுமைகள் குறைவாக உள்ளதால், வாகனங்களை இயக்கவே சிரமமாகவே உள்ளன. மத்திய அரசு ஓட்டுநர் கல்வித் தகுதியைக் குறைத்தது வரவேற்கத்தக்கது என்றார். மோட்டார் வாகன கட்டண உயர்வால் சிறிய வாகனங்கள், இருசக்கர வாகனங்களின் கட்டணம் 20 முதல் 30 மடங்கு வரை உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.