நாமக்கல் அடுத்துள்ள மேட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (45). இவர் குடும்பப் பிரச்னை காரணமாக கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் முருகேசனை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், அவர் மேல்சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் முருகேசனின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். போதிய பண வசதி இல்லாததால் மீண்டும் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்வதாக முருகேசனின் உறவினர்கள் தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.
அதற்கு தனியார் மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது. இந்நிலையில் இன்று (அக். 27) காலை முருகேசன் திடீரென உயிரிழந்தார்.
இதனால் அவரது உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் முருகேசனின் இறப்பிற்கு தனியார் மருத்துவமனையின் அலட்சியமே காரணம் எனக் கூறி உடலை வாங்க மறுத்து மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்பு அங்கு வந்த நாமக்கல் காவல் துறையினர் இறந்தவரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: ரம்மி விளையாட்டில் பணம் இழந்தவரின் சோக முடிவு! கடைசி நிமிடத்தில் மனைவிக்கு அனுப்பிய ஒலிப்பதிவு!