ETV Bharat / state

மல்லிகை பூ விலை கடும் சரிவு; விவசாயிகள் வேதனை! - Jasmine

நாமக்கல்: மல்லிகை பூ விலை கடும் சரிவை சந்தித்து வருவதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மல்லிகை பூ விலை கடும் சரிவு
author img

By

Published : May 5, 2019, 12:05 AM IST

நாமக்கல் மாவட்டம், வலையபட்டி, ஆண்டாபுரம், அரூர், ஒருவந்தூர், மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் மல்லிகை பூ சாகுபடி செய்துள்ளனர்.

மல்லிகை பூ விலை கடும் சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்

கடந்த மாதம் மல்லிகை பூ கிலோ ஒன்றுக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை விலைபோனது. தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ.100 முதல் ரூ.120 என விலை குறைந்து விற்பனையாகிறது. இந்த விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "கோடை மழை பெய்ததையொட்டி மல்லிகை பூக்களின் விளைச்சல் அதிகமாக உள்ளது. ஆனால், சித்திரை மாதத்தில் சுப காரியங்கள் ஏதுமில்லாததால் பூவின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது" என்றார்.

இப்பகுதியில் மல்லிகை பூ சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தீ.பரத்குமார்
நாமக்கல்

மே 04

மல்லிகை பூ விலை கடும் சரிவு, விலை வீழ்ச்சியால் விவசாயிகள் ஏமாற்றம், செண்ட் மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை.

நாமக்கல் மாவட்டம் வலையபட்டி, ஆண்டாபுரம், அரூர்,  ஒருவந்தூர், மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் மல்லிகைப் பூ சாகுபடி செய்துள்ளனர். கடந்த மாதம் கிலோ ஒன்று 300 முதல் 400 ரூபாய் வரை பெற்று நிலையில் தற்போது கிலோ ஒன்று ரூ 100 முதல் 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது .இதனால் மல்லிகை பூ சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தற்போது கோடை காலத்தில் பெய்த மழை யொட்டி அதிக அளவில் மல்லிகை உற்பத்தியாவதோடு தற்போது திருமண நிகழ்வு  இல்லாத நாள் சித்திரை மாதத்தில் பண்டிகை நாளிலும்  இருப்பதால் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். எனவே இப்பகுதியில் மல்லிகை பூ சென்ட் தொழிற்சாலை ஒன்றை அமைத்தால்  மல்லிகைப்பூ சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்  என்பது விவசாயிகளின்  நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

Script in mail 
Visual in ftp

File name ; TN_NMK_01_04_JASMINE_RATE_REDUCED_VIS_7205944  

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.