நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 877 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 87 விற்பனையாளர்கள், இரண்டு கட்டுநர் என மொத்தம் 89 காலிபணியிடங்களுக்கு கடந்த ஜூன் மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இப்பணியிடங்களுக்கு ஐந்தாயிரத்து 884 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான கடிதங்கள் அனுப்பப்பட்டு வந்தன.
இதன் அடிப்படையில் இன்று மாவட்ட துணை பதிவாளர் அலுவலகத்தில் நேர்காணல் தொடங்கியது. இதில் விண்ணப்பதாரரின் கல்வித் தகுதி, இருப்பிடச் சான்றிதழ் மற்றும் நன்னடத்தை சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு நேர்காணல் நடத்தப்படுகிறது. வரும் 9ஆம் தேதி வரை நடைபெறும் இந்த நேர்காணல் நடைபெறும். அதன் பின்னர் மதிப்பெண்களின் அடிப்படையில் பணி ஆணை வழங்கப்படும் என கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'மடியில் கனமில்லை என்பதால் வழியில் பயமில்லை' - அமைச்சர் தங்கமணி