ETV Bharat / state

வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி! - HANDYCAFT

நாமக்கல்: வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.

விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்
author img

By

Published : Mar 30, 2019, 8:08 AM IST

ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் வளாகத்திலிருந்து மூன்று சக்கர வாகனங்களில் புறப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பேரணியை, மாவட்ட தேர்தல் பார்வையாளர் வாணி மோகன் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆசியா மரியம் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனர்.

இதில், 100 சதவீதம் வாக்களிக்கவேண்டும், பணம் வாங்காமல் வாக்களிக்கவேண்டும், மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடி மையங்களில் போதுமான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. மேலும், இந்த பேரணியானது நல்லிப்பாளையம் உள்ளிட்ட முக்கிய சாலை வழியாகச் சென்று நாமக்கல் நகராட்சி அலுவலகத்தைச் சென்றடைந்தது.

Intro:வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி நாமக்கல்லில் மாற்றுத்திறனாளிகள் 3 சக்கர வாகன பேரணி நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்பு

Body:ஏப்ரல் 18 தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் 100% அனைவரும் வாக்களிக்கவேண்டும். பணம் வாங்காமல் வாக்களிக்கவேண்டும்.மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடி மையங்களில் போதுமான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது என்பன குறித்து பொது மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து துவங்கிய பேரணியை மாவட்ட தேர்தல் பார்வையாளர் வாணி மோகன் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆசியா மரியம் ஆகியோர் கொடியசைத்து தொடக்கிவைத்தனர்.

இந்த பேரணியானது நல்லிப்பாளையம் உள்ளிட்ட முக்கிய சாலை வழியாக சென்று நாமக்கல் நகராட்சி அலுவலகத்தை சென்றடைந்தது.

Conclusion:இதில் ஸநூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.