ETV Bharat / state

அரசுப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விபத்து - நல்வாய்ப்பாக உயிர் தப்பிய மாணவர்கள் - அரசுப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விபத்து

நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே குப்புச்சிபாளையம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பறையில் உள்ள கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மேசைகள் சேதமடைந்தன.

Government school
author img

By

Published : Oct 15, 2019, 6:48 PM IST

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே குப்புச்சிபாளையத்தில் செயல்பட்டுவரும் பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஆறு முதல் பத்தாம் வகுப்புவரை என மொத்தமாக 240 மாணவ மாணவியர் பயின்றுவருகின்றனர். தற்போது பள்ளி வளாகத்தில் உள்ள தலைமை ஆசிரியர் அறை, ஏழாம் வகுப்பறை, பத்தாம் வகுப்பறை ஆகிய கட்டடங்கள் 2008-2009ஆம் ஆண்டு பள்ளி சீரமைப்பு திட்டத்தில் கீழ் மூன்று கோடியே 62 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டன.

இந்தச் சூழலில் இன்று காலை ஏழாம் வகுப்பறைக்கு மாணவ மாணவியர் வழக்கம்போல் சென்றனர். அப்போது, அங்கிருந்த கான்கிரீட் மேற்கூரை பெயர்ந்து மேசைகளில் உடைந்து விழுந்திருப்பதைக் கண்டு மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த விபத்து நேற்று நள்ளிரவில் ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மேற்கூரை இடிந்து விபத்து ஏற்பட்ட குப்புச்சிபாளையம் அரசினர் உயர்நிலைப் பள்ளி

இதையடுத்து பாதிப்படைந்த கட்டடத்தில் இருந்த ஏழு, பத்தாம் வகுப்பு மாணவ மாணவியருக்கு வேறு வகுப்பறை இல்லாததால் மரத்தடியில் அமரவைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தினர். எனவே மாவட்ட கல்வித் துறை அலுவலர்கள் உடனடியாக பள்ளிக் கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என்று மாணவ மாணவியர் கேட்டுக்கொண்டனர்.

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமலிருக்க மாவட்ட கல்வித் துறை அலுவலர்கள் பரமத்திவேலூர் தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளில் உள்ள பழைய கட்டடங்களை ஆய்வு செய்ய வேண்டும். தரமற்ற கட்டடங்களில் மாணவ மாணவிகளை அமரவைத்து வகுப்புகள் எடுக்கக்கூடாது என்றும் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தனர்.

Intro:பரமத்தி வேலூர் அருகே அரசு பள்ளியின் பள்ளியின் மேற்கூரை இடிந்தது.Body:பரமத்திவேலூர் அருகே குப்புச்சிபாளையம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு அறையில் உள்ள கான்கிரீட் மேற்கூரை அதிகாலையில் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே குப்பிச்சிபாளையத்தில் செயல்பட்டு வரும் பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு உள்ளது. பள்ளியில் 240 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். தற்போது பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் ஏழாம் வகுப்பறை மற்றும் பத்தாம் வகுப்பறை மேலும் தலைமை ஆசிரியர் அறை கொண்ட கட்டிடம் கடந்த 2008 2009 ஆம் ஆண்டு பள்ளி சீரமைப்பு திட்டத்தில் கீழ் 3 கோடியே 62 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்த சூழ்நிலையில் ஏழாம் வகுப்பறையில் 45 மாணவ மாணவியர், பத்தாம் வகுப்பறையில் 30 மாணவ மாணவிகள் அந்தக் கட்டத்தில் கல்வி பயின்று வரும் சூழ்நிலையில் நேற்று பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற மாணவ மாணவிகள் இன்று காலை ஏழாம் வகுப்பறைக்கு வந்த மாணவ மாணவிகள் அதிர்ந்து போனார்.

என்னவென்று பார்த்தால் வகுப்பறை கான்கிரீட் மேற்கூரை பெயர்ந்து கீழே விழுந்ததில் மாணவிகள் அமரக்கூடிய இரும்பு பெஞ்ச் டெஸ்க் நசுங்கி போனது மற்றும் புத்தகம் வைக்கும் கடப்பாக்கல் செல்ப் உடைந்து தூள்தூளானது. இதுவே நேற்று மதியம் இன்று காலை பள்ளி தொடங்கி வகுப்பறையில் நடைபெறும் பொழுது இச்சம்பவம் நடைபெற்று இருந்தால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும்.
நேற்று நள்ளிரவில் கான்கிரீட் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பெரும் அசம்பாவிதங்கள் உயிர்சேதம் ஏதும் நடைபெறாமல் போனது.

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பரமத்திவேலூர் தாலுக்காவில் உள்ள அனைத்து பள்ளிகளில் உள்ள பழைய கட்டடங்களை ஆய்வு செய்ய வேண்டும். தரமற்ற கட்டடங்களில் மாணவ மனைவிகளை அமரவைத்து வகுப்புகள் எடுக்கக்கூடாது என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் பாதிப்படைந்த கட்டடத்தில் செயல்பட்டு வந்த ஏழாம் வகுப்பு பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வேறு வகுப்பறை இல்லாததால் மரத்தடியில் அமரவைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக பள்ளி கட்டடத்தை சீரமைத்து மாணவ மாணவிகள் வகுப்பறையில் அமர்ந்து கல்வி பயில்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்று மாணவ மாணவியர் கேட்டுக்கொண்டனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.