ETV Bharat / state

நாமக்கல்லில் சுகாதாரமான முறையில் ஷவர்மா தயாரித்து விற்கலாம் - உணவு பாதுகாப்பு அலுவலர் அறிவிப்பு! - உணவு பாதுகாப்புத் துறை

Food safety officer warning to the hotel owners: நாமக்கல்லில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பொதுமக்களுக்கு உணவு வழங்குமாறு ஹோட்டல் உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அறிவுரை வழங்கி உள்ளார்.

food safety department
ஹோட்டல் உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2023, 11:34 AM IST

ஹோட்டல் உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், சந்தைப்பேட்டை புதூரைச் சேர்ந்த கவிதா கடந்த மாதம் தனது மகள் கலையரசி, மகன் பூபதி, தாய் சுஜிதாவுடன் தனியார் கடையில் ஷவர்மா மற்றும் பிரியாணி சாப்பிட்டு உள்ளனர். பின்னர், வீடு திரும்பிய நிலையில் அவர்களுக்கு வாந்தி, மயக்கம், காய்ச்சல் ஆகியவை ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால், அங்கு போதிய மருத்துவர்கள் இல்லாததால், அங்கிருந்த செவிலியர்களால் முதலுதவி சிகிச்சை மட்டுமே அளித்து‌ அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அதன்பின், மீண்டும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிறுமி வீட்டிலேயே உயிரிழந்தார். மேலும், ஷவர்மா சாப்பிட்டு 43 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஷவர்மா மற்றும் கிரில் சிக்கன் போன்ற உணவு வகைகள் விற்பதற்கு மாவட்ட ஆட்சியரால் தடை விதிக்கப்பட்டது. இந்த சூழலில், நாமக்கல்லில் உள்ள தனியார் ஹோட்டலில் உணவுப் பாதுகாப்பு துறை சார்பில் நகர ஹோட்டல் உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாமக்கல் நகரில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண் கலந்து கொண்டு, ஹோட்டல் உரிமையாளருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், “ஹோட்டல்களில் அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சுத்தமாகவும், சுகாதாரமான முறையிலும் ஷவர்மா மற்றும் கிரில் சிக்கன் போன்றவை தயாரித்து விற்பனை செய்யலாம்.

மேலும், ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் அனைத்து உணவுகளும் இனி வரும் காலங்களில் சுகாதாரமான முறையில் தயாரிக்க வேண்டும். பழைய மற்றும் மீதமான பொருட்களைக் கொண்டு உணவு தயார் செய்து வாடிக்கையாளருக்கு வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு உணவு தயாரிப்பில் ஈடுபட வேண்டும். உணவகங்களில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது” என்றார்.

இதையும் படிங்க:“அத்திக்கடவு அவிநாசி திட்டம் 2 அறிக்கை தயார்” - அமைச்சர் துரைமுருகன் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.