ETV Bharat / state

ரஜினி கூறியதில் என்ன பிழை கண்டீர் - ஈஸ்வரன்

நதிநீர் இணைப்பிற்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்தது பொதுவான கருத்து. இது பாஜகவிற்கு ஆதரவான கருத்து இல்லை என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொமதேக ஈஸ்வரன்
author img

By

Published : Apr 10, 2019, 11:49 PM IST

நாமக்கல் தொகுதி மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சின்ராஜை ஆதரித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஈஸ்வரன், 'உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதால்தான் தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. வேலையின்றி தவிக்கும் இளைஞர்கள், கேஸ் விலை உயர்வால் பெண்களும், தேர்வு கட்டணம் உயர்வால் மாணவர்களும் என அனைத்து தரப்பிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக-பாஜக கூட்டணிக்கு விரைவில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். அதிமுக அமைச்சர்கள் பாஜக தேர்தல் அறிக்கையில் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் திட்டங்களை அறிவித்துள்ளது என கூறி வருகின்றனர். ஏதோ பிரதமர் மோடி எல்லையில் துப்பாக்கி வைத்து தாக்கத் தயாராக இருப்பதாகவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. இதனால் மக்கள் பாஜக மீதும் அதிமுக மீதும் கடும் கோபத்தில் உள்ளனர். மோடி இந்த ஐந்தாண்டு ஆட்சியில் என்ன செய்தார் என்பதை சொல்லத் தயாரா?

பாஜகவின் நதிநீர் இணைப்பு அறிக்கைக்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்தது பொதுவான கருத்து. இதனால் பாஜகவிற்கு ரஜினி மறைமுகமாக ஆதரவளித்துள்ளார் என கருதமுடியாது. பாஜக அதிமுக, தேமுதிக, பாமக கட்சிகளுக்குள் அதிகம் முரண்பாடுகள் உள்ளன. இந்த கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி, வியாபார நோக்கில் சேரப்பட்ட கூட்டணி என்று அவர் விமர்சித்தார்.

Intro:நதிநீர் இணைப்பிற்கு வரவேற்பதாக ரஜினி கூறியுள்ளது பொதுவான கருத்து. இது பாஜகவிற்கு ஆதரவாக இல்லை - ஈஸ்வரன்

Body:நாமக்கல் சேலம் சாலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைமை தேர்தல் அலுவலகத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார் .

அப்போது பேசிய அவர் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மக்களிடையே நல்ல ஆதரவும் வரவேற்பும் உள்ளது. தொகுதி முழுவதும் தண்ணீர் பஞ்சம் அதிக அளவு உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்ததே இதற்கு காரணமாக உள்ளது. அதிமுக கடந்த மூன்றாண்டுகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் இருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்கி உள்ளனர் என்பதை பிரச்சாரத்தின் வாயிலாக தெரியவந்துள்ளது. லாபம் இல்லாமல் தொழிலாளர்கள், வேலை இல்லாமல் இளைஞர்களும் கேஸ் விலை உயர்வால் பெண்களும் தேர்வு கட்டணம் உயர்வால் மாணவர்களும் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த தயாராக உள்ளன.

மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக தங்களை தாங்களாகவே வலிமையானதாகவும் பாதுகாப்பானதாகவும் உள்ளதாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதிமுக அமைச்சர்கள் பாஜக தேர்தல் அறிக்கையில் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் திட்டங்களை அறிவித்துள்ளது என கூறி வருகின்றனர். ஏதோ பிரதமர் மோடி எல்லையில் துப்பாக்கி வைத்து தாக்கத் தயாராக இருப்பதாகவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. இதனால் மக்கள் பாஜக மீதும் அதிமுக மீதும் கடும் கோபத்தில் உள்ளனர்.

நாமக்கல் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் சின்ராஜ் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் பிரதமர் மோடி ஐந்தாண்டுகளில் என்னென்ன செய்தார்கள் என்பதை சொல்ல தயாரா என கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் கடந்த 50 ஆண்டுகளில் செய்யவில்லையா பாஜக மட்டும் ஏதோ நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றது போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

நதிநீர் இணைப்பு வரவேற்பு உள்ளதால் ரஜினி கூறியுள்ளார். இது பொதுவான கருத்து. இதனால் பாஜகவிற்கு ரஜினி மறைமுகமாக ஆதரவளித்துள்ளார் என கருதமுடியாது. பாஜக அதிமுக,தேமுதிக,பாமக கட்சிக்குள் முரண்பாடுகள் அதிக அளவில் உள்ளனர். இந்த கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி, வியாபார நோக்கில் சேரப்பட்ட கூட்டணி எனவும் விமர்சித்தார்.

நாமக்கல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஊடகங்களில் பேச மறுப்பது குறித்து எழுப்பிய கேள்விக்கு நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஊடகங்களில் எப்போதும் வாய் திறந்து பேசமாட்டார். இங்கு வாய் திறந்து பேச முடியாதவர் எப்படி பாராளுமன்றத்தில் சென்று நாமக்கல் மாவட்ட மக்கள் பிரச்சனையை பேசுவார் என்றும் விமர்சித்தார்.

முடிந்தால் அவரை ஊடகங்களில் பேச வைத்து காட்டுங்கள் ஈன சவால் விடுத்தார்.

Conclusion:இந்த செய்தியாளர் சந்திப்பின்போது திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் காந்தி செல்வன்,காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட செயலாளர் ஷேக் நவீத்,கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் என கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.