ETV Bharat / state

மின் கட்டணத்தை உயர்த்தவில்லை: அமைச்சர் தங்கமணி!

நாமக்கல்: கரோனா காலத்தில் மின் கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

பேட்டி: அமைச்சர் தங்கமணி
பேட்டி: அமைச்சர் தங்கமணி
author img

By

Published : Jun 5, 2020, 5:20 PM IST

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் மெகராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் தங்கமணி பேசுகையில், “கரோனா முடிவுக்கு வந்த பிறகு மின் வாரியத்தில் டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் பணிக்கு ஆள்சேர்க்கை நடைபெறும். மேலும் கேங்மேன் பணி நியமனம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் வழக்கு முடிவுக்கு வந்த பிறகு நியமனம் செய்யப்படும். அதுபோல தரமான மின் கம்பங்களே மின் வாரியத்தில் பயன்படுத்தப்படும்.

கரோனா காலத்தில் வீடுகளில் மின் பயன்பாடு அதிகமாக இருந்துள்ளதாகவும், 4 மாத பயன்பாட்டு யூனிட்டை இரண்டாக பிரித்து தனித்தனியாக கணக்கிட்டு வசூலிப்பதாகவும், பல தலைவர்கள் அறிக்கை விட்டுள்ளனர். ஆனால் மின் கட்டணம் ஏதும் உயரவில்லை, சேர்த்தும் வாங்கல்லை. இது தவறான தகவல்.

பேட்டி: அமைச்சர் தங்கமணி

பிரசன்னா நடிகராக இருப்பதால் உண்மை நிலைமையை புரிந்து ஓரு வாரியத்தின் மீது தவறாக சொல்லி இருப்பது ஏற்கனவே நாங்கள் விளக்கம் கொடுத்து உள்ளோம். மேலும் பிரசன்னா, ஒரு மாத கால கட்டணமான ரூ 13000ஐ கட்டவில்லை. அதற்கு பிறகு ரீடிங் எடுக்கும் போது 6920 யூனிட் பயன்படுத்தி உள்ளார். அதனை இரண்டாக பிரித்து கட்ட சொல்லி உள்ளோம். மின்வாரியம் விளக்கம் அளித்த பிறகு அதனை பிரசன்னா ஏற்றுக்கொண்டு உள்ளார்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜெ.அன்பழகனை காண நேரில் சென்ற அமைச்சர்- முதலமைச்சருக்கு நன்றி கூறிய மகன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.