ETV Bharat / state

நாமக்கல்லில் முட்டை விலை வரலாறு காணாத உயர்வு!

நாமக்கல் கோழிப்பண்ணை வரலாற்றில் அதிகபட்ச விலையாக, ஒரு முட்டையின் விலை ரூ.5.65 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் வரலாறு காணாத அளவுக்கு முட்டை விலை உயர்வு!

author img

By

Published : Jan 9, 2023, 9:47 AM IST

நாமக்கல்: நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் நாள்தோறும் 4.50 கோடி முட்டைகள் வீதம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகளுக்கு நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு விலை நிர்ணயம் செய்து வருகிறது.

அதன்படி ரூ.5.55 காசுகளாக இருந்த முட்டை விலை, இன்று 10 காசுகள் உயர்ந்து ரூ.5.65 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு (2022) முட்டை விலை ரூ.5.50 காசுகளாக இருந்தது. அதுவே முட்டை வரலாற்றில் உச்சபட்ச விலையாக இருந்தது. ஆனால் ஜன.1-ம் தேதி ரூ.5.55 காசுகளாக இருந்த முட்டை விலை, தற்போது அதையும் தாண்டி இன்று (ஜன.9) ரூ.5.65 காசுகளாக உயர்ந்துள்ளது. இது கோழிப்பண்ணை வரலாற்றில் அதிகபட்ச விலையாக இருக்கிறது.

இதனால் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் இதுகுறித்து கோழிப்பண்ணையாளர்கள் கூறுகையில், “வட மாநிலங்களில் குளிர் நிலவுவதால் நுகர்வு அதிகரித்துள்ளது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளதாலும், சத்துணவுத் திட்டத்திற்கு அனுப்பப்படுவதாலும் முட்டை விலை உயர்ந்து வருகிறது’ என தெரிவித்தனர்.

சென்னையில் சில்லறை விற்பனையில் முட்டை ஒன்றின் விலை 6 ரூபாய் முதல் ரூ.6.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது முட்டை பிரியர்களுக்கு சற்று அதிருப்தியை ஏற்படுத்தினாலும், கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சாக்லேட் பவுடரில் 211 கிராம் தங்கம் கடத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.