நாமக்கல்: மோகனூர் அடுத்த ஒருவந்தூர் அருகே காவேரி ஆற்றில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது. கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்த சமயத்தில் இருந்து இந்த குவாரி செயல்படவில்லை.
இந்த குவாரியில் நேற்று மாலை 7 கார்களில் வந்த அமலாக்கத்துறையினர் 2 குழுக்களாக பிரிந்து குவாரியில் திடீர் மேற்கொண்டனர். ஆற்றில் இறங்கி அரசு அனுமதித்த அளவை விட முறைக்கேடாக அள்ளப்பட்டுள்ளதா எனவும் சோதனையிட்டனர். மேலும் இந்த சோதனையில் டிரோன் மூலம் எவ்வளவு மணல் அள்ளப்பட்டுள்ளது என டிஜிட்டல் முறையில் கணக்கீடு செய்தனர்.
சுமார் 30 மத்திய பாதுகாப்பு படையினர் குவாரியை சுற்றி நின்று அமலாக்க்கதுறையினர் நடத்தி வரும் இந்த சோதனைக்கு பாதுகாப்பு அளித்தனர். நேற்று காலை கரூரில் உள்ள இரண்டு மணல் குவாரிகளில் அமலாக்கதுறையினர் மணல் அள்ளப்பட்ட அளவை கணக்கிட்ட நிலையில், இதனைத்தொடர்ந்து மோகனூர் அடுத்த ஒருவந்தூரில் உள்ள குவாரிகள் கணக்கீடு செய்யப்பட்டது.
கடந்த செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதியந்து மோகனூர் அடுத்த குமரிபாளையத்தில் உள்ள மணல் கிடங்கில் மணல் விற்பனையில் பல்வேறு முறை கேடுகள் நடப்பதாகவும், சட்டவிரோதமாக மணல் விற்பனை நடைபெறுவதாகவும் புகார் எழுந்து வந்ததையடுத்து அமலாக்கதுறையினர் 36 மணி நேரமாக சோதனையிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "மீண்டும் கடையம் திரும்பினான் பாரதி" - பாரதியின் வாழ்க்கையை தத்ரூபமாக வரைந்து வரும் ஓவியர்கள்!.. என்ன சிறப்பு தெரியுமா?