ETV Bharat / state

'பயப்படாதீங்க...மின்சார வாரியம் தனியார்மயம் ஆகாது' - அமைச்சர் தங்கமணி - மருத்துவ ஒதுக்கீடு

தமிழ்நாடு மின்சார வாரியம் எந்த சூழ்நிலையிலும் தனியார்மயம் ஆகாது என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

eb minister thangamani  minister thangamani
'பயப்படாதீங்க.. மின்சார வாரியம் தனியார் மயம் ஆகாது'- அமைச்சர் தங்கமணி
author img

By

Published : Oct 23, 2020, 10:27 PM IST

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் 90 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரசு திட்டப் பணிகளை தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து ஆனங்கூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பரமத்தி வேலூரில் ராஜ வாய்க்கால் புனரமைப்பு பணியை மேற்கொள்ள 184 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன. பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வருகின்ற ஒன்றாம் தேதி ராஜவாய்க்காலை புனரமைக்கும் பணி நிறைவடையும். பணி நிறைவடைந்த அடுத்த நாளே அதாவது நவம்பர் இரண்டாம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும்.

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டுமென ஆளுநரை சந்தித்து அமைச்சர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆளுநர் பரிசீலனை செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

மின்சார வாரியம் தனியார்மயம் ஆகாது - அமைச்சர் தங்கமணி

எந்தச் சூழ்நிலையிலும் தமிழ்நாடு மின்சார வாரியம் தனியார்மயம் ஆகாது. மத்திய அரசு கொண்டு வருகிற மின்சார திருத்தச்சட்டம் - 2020ஐ மாற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. மின்வாரியத் தொழிலாளர்கள் மத்தியில், மின்வாரியம் தனியார் மயமாக்கப்படும் என்பது போன்ற தவறான பரப்புரையை ஒரு சிலர் மேற்கொண்டுள்ளனர்.

யாருடைய தவறான பரப்புரையையும் நம்ப வேண்டாம். அரசு தனியார்மயத்திற்கு ஆதரவாக இருக்காது. மின்சார வாரியத் தொழிலாளர்கள் பயப்படவேண்டிய அவசியம் இல்லை" என்றார்.

இதையும் படிங்க: திருமணிமுத்தாறு பாலத்தை கட்ட கோரி இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.