கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் வழக்கத்தை விட இறைச்சிக் கடைகளில் கூட்டம் கூட்டமாக குவிந்து இறைச்சி வாங்கிச் செல்கின்றனர்.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாமக்கல்லில் இன்று (04.03.20), நாளை (05.04.20) ஆகிய இரு நாள்களுக்கு கோழி, ஆடு, மீன் இறைச்சி விற்பனை தடை செய்யப்படுகிறது. முட்டை விற்பனை வழக்கம் போல் இருக்கும், முட்டை கடைகளுக்கு தடையில்லை என்று மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறைச்சி வாங்க ஓரிடத்தில் குவிந்ததின் எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் 8 இடங்கள் மூடப்பட்டு சீல்!