தமிழ்நாடு முழுவதும் தேவேந்திர குல வேளாளரை பிற்படுத்தப்பட்ட வகுப்பு பட்டியலில் சேர்க்கக் கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை அந்த பிரிவை சேர்ந்த மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலையும் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் நாமக்கல் கொசவம்பட்டியில் தேவேந்திர குல வேளாளரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கக் கோரி 50க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளில் கருப்புக் கொடிகளை ஏற்றி போராட்டம் நடத்தினர்.
மேலும் தமிழ்நாடு அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தமிழ்நாடு அரசு தேவேந்திர குல வேளாளரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கவில்லை எனில் தீவிர போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் இடைத்தேர்தல்: 'சாதிய உள்பிரிவுகளை ஒன்றிணைங்க...!' - போர்க்கொடி உயர்த்தும் நாங்குநேரி வாசிகள்!