மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் கடந்த 12 நாள்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று நாடுமுழுவதும் பொது வேலை நிறுத்தம் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், நாமக்கல் நகர் பகுதி கடைவீதியில் செயல்பட்டு வரும் 150-க்கும் மேற்பட்ட நகைக் கடை உரிமையாளர் தங்களின் கடைகளை அடைத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.