ETV Bharat / state

பரமத்தியில் வெற்றிலை, வாழை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

நாமக்கல்: பரமத்திவேலூரில் வெற்றிலை, வாழை விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

author img

By

Published : Apr 29, 2020, 4:45 PM IST

நாமக்கல் விவசாயிகள் ஆர்பாட்டம்  விவசாயிகள் ஆர்பாட்டம்  விவசாயிகள் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்  Farmers protest  Namakkal Farmers protest  Demonstration of farmers' demand
Namakkal Farmers protest

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் 2500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை, வெற்றிலை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக மே 3ஆம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது.

இதன் காரணாமாக வெற்றிலை, வாழை விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் வெற்றிலை, வாழை விவசாயிகளுக்கு ரூ. 5 ஆயிரம் நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும்;

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்

வங்கியில் வாங்கப்பட்ட கடன் செலுத்தப்பட வேண்டிய தவணையை ஒத்திவைக்க வேண்டும்; குளிர்பதனக் கிடங்கு அமைத்துத் தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது, விவசாயிகள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து கைகளில் கறுப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மலைக்கிராம மக்களுக்கு உதவிய தனியார் சோலார் நிறுவனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.