ETV Bharat / state

100% வாக்குப்பதிவு - விழிப்புணர்வு கோலப்போட்டி

author img

By

Published : Mar 8, 2021, 6:28 PM IST

நாமக்கல் மாவட்டத்தில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது.

Awareness programme for 100% vote in Namakkal

நாமக்கல்: தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. 100 விழுக்காடு வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாக்காளர் கையெழுத்து இயக்கம், மாதிரி வாக்குப்பதிவு பயிற்சி நடைபெற்று வருகின்றன.

இதன் ஒருபகுதியாக 2021 சட்டமன்றத் தேர்தலில் நூறு விழுக்காடு வாக்குப்பதிவு குறித்து பொதுமக்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாமக்கல் பேருந்து நிலையத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கோலப் போட்டி நடைபெற்றது. இதில், பெண்கள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டு, பல்வேறு வண்ணங்களில் கோலமிட்டனர்.

வாக்குப்பதிவிற்கான விழிப்புணர்வு

இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மெகராஜ் பார்வையிட்டார். தொடர்ந்து வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது. இறுதியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்பாடு குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.