ETV Bharat / state

ஆகஸ்ட் 3இல் நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மலர் கண்காட்சி

நாமக்கல்: வல்வில் ஓரி விழாவை முன்னிட்டுஆகஸ்ட் 3ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்துக்கு ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆட்சியர் ஆசியா மரியம்
author img

By

Published : Aug 1, 2019, 9:13 AM IST

கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியைப் போற்றிடும் வகையில், ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா கொல்லிமலையில் கொண்டாடப்பட்டுவருகின்றது. அதேபோல், இந்த ஆண்டும் வரும் ஆகஸ்ட் 2, 3 ஆகிய தேதிகளில் அங்குள்ள வல்வில் ஓரி அரங்கில் விழா நடைபெறவுள்ளது.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா, மலர் கண்காட்சி உள்ளிட்டவை நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு கூட்டமானது கடந்த வாரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவையொட்டி காவல் துறை, வனத் துறை, ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், கூட்டுறவுத் துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, பட்டு வளர்ச்சித் துறை, குடும்ப நலம் மற்றும் சுகாதாரத் துறை, சித்த மருத்துவத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, சமூக நலத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படவுள்ளதாக அக்கூட்டத்தில் உறுதிபடுத்தப்பட்டது.

இதையடுத்து, ஆகஸ்ட் 3ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Intro:கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 3ம் தேதி நாமக்கல் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Body:ஆகஸ்ட் 3ம் தேதி மாவட்டத்துக்கு ஒரு நாள் விடுமுறை அறிவித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொல்லிமலையில் ஆகஸ்ட் 2, 3ம் தேதிகளில், மாவட்ட நிர்வாகம் சார்பில் வல்வில் ஓரி விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற இருப்பதாக ஆட்சியர் மு.ஆசியா மரியம் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியைப் போற்றிடும் வகையில், ஆண்டுதோறும், தமிழக அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா, கொல்லிமலையில் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதேபோல், இந்த ஆண்டும் வரும் ஆகஸ்ட் 2, 3 ஆகிய தேதிகளில் அங்குள்ள வல்வில் ஓரி அரங்கில் விழா நடைபெறவுள்ளது.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர் கண்காட்சி உள்ளிட்டவை நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு கூட்டம், ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் தலைமையில் கடந்த வாரம் ஆலோசனை நடைபெற்றது.

இவ் விழாவையொட்டி காவல் துறை, வனத் துறை, ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், கூட்டுறவுத் துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, பட்டு வளர்ச்சித் துறை, குடும்ப நலம் மற்றும் சுகாதாரத் துறை, சித்த மருத்துவத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, சமூக நலத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.