ETV Bharat / state

ஏடிஎம்மில் கிடந்த பணம் : காவல் துறையில் ஒப்படைத்த பெண்! - ATM machine

நாமக்கல்லில் ஏடிஎம் இயந்திரத்தில் கேட்பாரற்று இருந்த பணத்தை காவல் துறையில் ஒப்படைத்த பெண்ணுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

போலீசில் ஒப்படைத்த பெண்
போலீசில் ஒப்படைத்த பெண்
author img

By

Published : Mar 6, 2021, 11:44 AM IST

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள வாழவந்தி ‌பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சீவி. இவரது மகள் ஆதிபகவதி (23). இவர் நேற்று (மார்ச் 5) மாலை நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம்மிற்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார்.

அப்போது ஏற்கனவே ஏடிஎம் இயந்திரத்தில் நான்காயிரம் ரூபாய் வெளிவந்த நிலையில் இருந்துள்ளது. இதனைக் கண்ட ஆதிபகவதி அப்பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்து யாரும் உள்ளனரா என்று தேடிப்பார்த்தார்.

ஆனால் யாரும் இல்லாத காரணத்தினால் அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு உடனடியாக நாமக்கல் காவல் நிலையம் சென்று காவல் ஆய்வாளர் குமாரிடம் ஒப்படைத்தார். அவரது நேர்மையை காவல் துறையினர் வெகுவாகப் பாராட்டினர்.

இதையும் படிங்க: தொடரும் பட்டாக்கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டும் கலாசாரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.