ETV Bharat / state

வெளிநாட்டில் உள்ளவர் பெயரில் ரூ.2.8 லட்சம் பயிர்கடன்; மோசடியில் ஈடுபட்ட கூட்டுறவு சங்க தலைவர் தற்காலிக பதவி நீக்கம்

வெளிநாட்டில் உள்ளவர் பெயரில் ரூ.2.8 லட்சம் வரை பயிர்கடன் வழங்கி மோசடியில் ஈடுபட்டதாக ஆரியூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் ஏ.சி.மணியை தற்காலிக பதவி நீக்கம் செய்து நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் செல்வக்குமரன் உத்தரவிட்டுள்ளார்.

தற்காலிக பணிநீக்கம்
தற்காலிக பணிநீக்கம்
author img

By

Published : Jun 14, 2022, 1:17 PM IST

நாமக்கல்: மோகனூர் அடுத்த ஆரியூரில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் ஏ.சி.மணி. இவர் மாவட்ட அதிமுக ஒன்றிய அவைத்தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வசித்துவரும் அவரது சகோதரர் சுப்ரமணியம் என்பவரது பெயரில் கடந்த 2020 ஆம் ஆண்டு ரூ.1.2 லட்சம் கூட்டுறவு வங்கியில் பயிர்க்கடன் பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து கடந்த 2021ஆம் மீண்டும் தனது‌ சகோதரர் பெயரில் போலி கணக்கு தொடர்ந்து ரூ.1.6 லட்சம் வட்டியில்லா பயிர் கடன் பெற்றுள்ளார்.

திமுக ஆட்சி அமைந்ததும்‌ அந்த கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட மற்றும் மாநில கூட்டுறவு சங்க பதிவாளருக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக கூட்டுறவு துறை அலுவலர்கள் தலைமையில் ஆரியூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையிலான முதற்கட்ட விசாரணையில் கூட்டுறவு சங்க தலைவர் ஏ.சி.மணி மோசடி செய்ததற்கு முகாந்திரம் இருப்பதாக கூட்டுறவு சங்க அலுவலர்கள் அறிக்கை தாக்கல் செய்தனர்.

அதன்படி, இன்று (ஜூன்14) ஆரியூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் ஏ.சி.மணியை தற்காலிக பதவி நீக்கம் செய்து நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் செல்வக்குமரன் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் விரிவான விசாரணைக்கு பின்னர் ஏ.சி.மணி மோசடி செய்தது தெரிய வந்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் செல்வக்குமரன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 90ஸ் கிட்ஸின் இணைய வாசலுக்கு மூடுவிழா!!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.