ETV Bharat / state

கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் - அமைச்சர் மதிவேந்தன் தகவல்!

நாமக்கல்:மாவட்டத்தில் கரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக 16 மருத்துவர்களும், 45 செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் செவிலியர்கள் கூடுதலாக நியமனம் - அமைச்சர் மதிவேந்தன்

author img

By

Published : May 25, 2021, 8:47 AM IST

நாமக்கல் மாவட்டத்தின் சுற்றுலா மாளிகையில், கரோனா தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று (மே.24) சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் நடைப்பெற்றது. மாவட்ட ஆட்சியர் மெகராஜ், சட்டப்பேரவை உறுப்பினர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மதிவேந்தன் ’’நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்ததாகவும், மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடய படுக்கை வசதிகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக 16 மருத்துவர்களும், 45 செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்றார்

தொர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் இறப்பு விகிதம் குறைந்து கொண்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 2,450 படுக்கைளில், தற்போது 1,797 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன. மீதம் 653 காலியாக உள்ளதாகவும், ஆக்சிஜன் வசதி கொண்ட 768 படுக்கைகளில் 747 படுக்கை நிரம்பி உள்ளதாகவும், அதில் 21 படுக்கைகள் காலியாக உள்ளதாகவும், மாவட்டத்தைப் பொறுத்த வரைக்கும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை.

மருத்துவர்கள் செவிலியர்கள் கூடுதலாக நியமனம் - அமைச்சர் மதிவேந்தன்

நாளை முதல் மாவட்டத்தில் உள்ள 18 - 44 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறவுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, வரை 28 ஆயிரத்து 700 தடுப்பூசி கையிருப்பில் உள்ளன.

பொதுமுடக்கத்தால் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளதால், அங்கு தொழில் நடத்தி வந்த சிறுகுறு வியாபாரிகள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிறுகுறு வியாபாரிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து முதலமைச்சரிடம் கலந்து ஆலோசனை மேற்கொண்டு, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாலியல் குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.