ETV Bharat / state

தேர்தல் வேட்டை: நாமக்கல்லில் ஒன்றரை லட்சம் ரூபாய் பறிமுதல்! - Namakkal district Police

நாமக்கல்: பறக்கும் படையினர் நாமக்கல்லில் மேற்கொண்ட சோதனையின்போது, காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டது.

பறக்கும் படையிடம் சிக்கிய பணம்
பறக்கும் படையிடம் சிக்கிய பணம்
author img

By

Published : Mar 8, 2021, 5:14 PM IST

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது காரில் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.

பறக்கும் படையிடம் சிக்கிய பணம்

அப்போது சேந்தமங்கலம் அருகிலுள்ள மின்னாம்பள்ளி அருகே காரை தடுத்து நிறுத்தி, சோதனைசெய்த பறக்கும் படையினர் காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல்செய்தனர்.

பறக்கும் படையிடம் சிக்கிய பணம்
பறக்கும் படையிடம் சிக்கிய பணம்
பணம் எடுத்துவந்த கார்த்திக்கிடம் விசாரணை மேற்கொண்டதில் அவரது நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுப்பதற்காக இப்பணம் எடுத்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.

கருவூலத்தில் ஒப்படைப்பு

இருப்பினும் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதால் அப்பணத்தைப் பறிமுதல்செய்த பறக்கும் படையினர் அதனைக் கருவூலத்தில் செலுத்தினர்.

இதையும் படிங்க:சிவகாசியில் பறக்கும் படை பறிமுதல் செய்த 4 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் வட்டாட்சியரிடம் ஒப்படைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.