நாமக்கல் மாவட்டம் குருசாமிப்பாளைத்தைச் சேர்ந்தவர் தனம். 65 வயதாகும் இவரின் கணவர் கந்தசாமி சில காலங்களுக்கு முன் மரணமடைந்துள்ளார். தனம் தனது இரண்டு மகன்கள், மூன்று மகள்களுக்குத் திருமணம் முடித்துவைத்து, தற்போது தனியாக வசித்துவந்தார். மூன்றாவது மகளான விஜயாவின் கணவர் ஆறு ஆண்டுகளுக்கு முன் பேருந்து விபத்தில் இறந்ததாகக் கூறப்படுகிறது.
இத்தறுவாயில் விஜயாவுக்கு தருமபுரியைச் சேர்ந்த சாமுவேல் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது நெருங்கிய உறவாக மாறியிருக்கிறது. ஆனால் சாமுவேலுக்கோ விஜயாவை விடுத்து, அவர் தங்கை மகளான வசந்தி மீது மோகம் வந்துள்ளது. வசந்தியை அடைய நினைத்த சாமுவேலை பலமுறை, விஜயாவின் குடும்பத்தினர் எச்சரித்துள்ளனர்.
கணவரைத் தாக்கி, கர்ப்பிணிப் பெண்ணைச் சீரழித்த கும்பல்... நடந்தது என்ன?
இதில் ஆத்திரமடைந்த சாமுவேல், அமிலம், கத்தி ஆகிய ஆயுதங்களுடன் வசந்தியைக் கடத்த, இன்று அவர் வீட்டுக்குச் சென்றுள்ளார். சாமுவேலின் எதிர்பார்ப்பைத் தகர்க்கும் வகையில் அங்கு வசந்தியின் பாட்டி தனம் மட்டும் இருந்துள்ளார். மேலும் கோபமடைந்த சாமுவேல், வசந்தியை தன்னுடன் அனுப்பிவைக்குமாறு மிரட்டியுள்ளார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ரயிலில் விழுந்து தற்கொலை! நடந்தது என்ன?
அவரது மிரட்டலுக்கு அஞ்சிய தனம் கூக்குரலிட, ஊர் மக்கள் வீட்டின் முன் திரண்டுள்ளனர். தன்னை தற்காத்துக்கொள்ள ஊர் மக்களின் மீது அமிலம் வீசி பயமுறுத்தியுள்ளார் சாமுவேல். இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகத் தெரிகிறது. காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, உடனடியாக இச்சம்பவம் குறித்து காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலையில் டிபன் கடை... மாலையில் செயின் பறிப்பு! - ஆடம்பரமாக வாழ பெண் செய்த பகுதி நேர வேலை
காவல் துறையினர் வந்து சாமுவேல் கட்டுப்பாட்டில் உள்ள தனத்தை மீட்கப் பலகட்ட முயற்சி மேற்கொண்டனர். ஆனால் சாமுவேல் தனம் மீது அமிலத்தை ஊற்றியதோடு தாக்கி அவரை கத்தியால் குத்தியும் படுகொலை செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் ஒன்றுகூடி சாமுவேலை இரும்புக் கம்பியாலும், தடியாலும் கடுமையாகத் தாக்கினர். இதில் சாமுவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
‘நாகைக்கு எதற்கு 2ஆவது மருத்துவக்கல்லூரி... மயிலாடுதுறைக்குக் கொடுங்கள்’ - பொதுமக்களின் ஏக்கம்!
இதனைத் தொடர்ந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்த காவல் துறையினர் தனம், கொலையாளி சாமுவேல் ஆகியோரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
கொலையாளி சாமுவேலின் மீது வழிப்பறி, திருட்டு வழக்குகள் பல நிலுவையில் உள்ளதாகக் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலையாளியைப் பொதுமக்களே ஒன்றுதிரண்டு அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.