நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், கந்தம்பாளையம் அருகே உள்ள செருக்கலை பகுதியைச் சேர்ந்தவர்கள் கொக்கிகுமார் என்கின்ற குமார்(27) , லாரி ஓட்டுநர்கள் சரவணன் (28) மற்றும் சக்தி (28) ஆகியோர். இவர்கள், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாய் தந்தையை இழந்து அதே பகுதியில் உள்ள அண்ணன் வீட்டில் வளர்ந்துவரும் 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான சிறுமி, தனது அண்ணனின் மனைவியிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட நல்லூர் காவல்துறையினர் மூன்று பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தரப்பட்டது உண்மை என தெரிய வந்தது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரவணன், சக்தி ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கொக்கிகுமார் என்ற குமார் என்பவரை தேடி வருகின்றனர்.