நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த கோனேரிப்பட்டி - திருப்பதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தமிழரசன். இவர் வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். இவரது மனைவி சுகன்யா மற்றும் 3 குழந்தைகளுடன் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், சுகன்யா உறவினர் விட்டிற்குச் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சிடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.
பீரோவில் இருந்த 12 சவரன் நகைகள் மற்றும் ரூ.20 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
உடனடியாக காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி கேமரா மூலமாக தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், வீட்டில் உள்ள சிசிடிவி கேமராக்கள் கடந்த 4 நாள்களாக இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.