நாமக்கல் மாவட்டம் பொன்நகர் பகுதியில் ஜெகநாதன் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இங்கு நேற்றிரவு வழக்கம் போல், பணிகள் முடிந்த பிறகு உணவக ஊழியர்கள் இரவு 12 மணியளவில் உணவகத்தைப் பூட்டிச் சென்றுள்ளனர். காலை அப்பகுதியில் சென்ற நபர்கள் உணவகத்தில் புகை மூட்டமும், தண்ணீரும் அதிகளவு வெளியேறியுள்ளதைக் கண்டு உரிமையாளருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து உணவகத்துக்கு விரைந்து வந்த ஜெகநாதன், ஹோட்டலைத் திறந்து பார்த்த போது அரிசி, காய்கறிகள், டிவி, குளிர்சாதனப் பெட்டிகள், மேஜைகள், நாற்காலிகள், மின் விசிறிகள் என அனைத்துப் பொருட்களும் எரிந்து நாசமாகியிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்தப் பொருட்களின் மதிப்பு சுமார் ரூ. 10 லட்சம் இருக்கும் எனக் கணக்கிட்டுள்ளனர். இதில், கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவும், ஹார்ட் டிஸ்க்கும் முற்றிலும் எரிந்து சாம்பலானது
இந்த விபத்து மின் கசிவினால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் ஏற்பட்டதா என நல்லிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திம்பம் மலைப்பாதையில் வெங்காயம் லாரி கவிழ்ந்து விபத்து!