மயிலாடுதுறை அருகே மேலமாப்படுகை கன்னித்தோப்பு தெருவைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் விஜய் (23). பாலிடெக்னிக் படிப்பை முடித்த விஜய், சென்னையில் வேலை பார்த்துவிட்டு தற்போது சொந்த ஊரில் வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று இருசக்கர வீட்டிற்கு சென்று கொண்டிருந்த விஜய், சாலையில் சென்று கொண்டிருந்த மனோகர் (55) என்பவரின் மீது லேசாக உரசியுள்ளார். இதில், விஜய்க்கும், மனோகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கு திரண்ட மனோகர் ஆதரவாளர்கள் விஜய்யை தாக்கியுள்ளனர்.
இதையடுத்து, விஜய் தனது ஆதரவாளர்களுடன் இணைத்து மனோகர் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, மனோகரின் ஆதரவாளர் ஒருவர், விஜய்யின் வயிற்றுப்பகுதியில் கத்தியால் குத்தியுள்ளார். இதில், விஜய் குடல்சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் தலைமையிலான மயிலாடுதுறை காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை சம்பவத்தில் தொடர்புடைய மனோகர், அவரது சகோதரர் சுந்தர்ராஜ் மற்றும் இரண்டு இளைஞர்களை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.