ETV Bharat / state

முன்விரோதம் காரணமாக இருதரப்பினரிடையே மோதல்; கூர்மையான ஆயுதங்களால் தாக்கும் வீடியோ வைரல்!

Youth Conflict in Mayiladuthurai: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், முன்விரோதம் காரணமாக ஒருவரை, நான்கு பேர் சேர்ந்து கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்விரோதம் காரணமாக இருதரப்பினரிடையே மோதல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2023, 3:08 PM IST

முன்விரோதம் காரணமாக இருதரப்பினரிடையே மோதல்

மயிலாடுதுறை: சீர்காழி தாலுகா வடகால் கிராமம் காந்தி நகரை சேர்ந்த நரேஷ். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் நடந்த கோயில் திருவிழாவில் நரேஷுக்கும், அதே கிராமம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த மணிகண்டன், மணிமாறன், விக்னேஷ், நேசமணி ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதனை அடுத்து போலீசார் வந்து, இரு தரப்பையும் சமாதானம் செய்தனர்.

இந்த நிலையில் வடகால் கடை வீதிக்கு வந்த நரேஷை, மணிகண்டன், ஜெகதீஷ், மணிமாறன் உள்ளிட்ட நான்கு நபர்களும் சேர்ந்து தாக்கியுள்ளனர். நரேஷை, கூர்மையான ஆயுதங்கள் மற்றும் இரும்பு கம்பி கொண்டு பலமாக தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். நரேஷை பள்ளத்தில் தள்ளி முன்னும், பின்னும் மாறி மாறி தாக்கும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலின் போது படுகாயம் அடைந்த நரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் ராஜா, பாக்கியராஜ் ஆகியோர் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மற்றொரு தரப்பைச் சேர்ந்த மணிகண்டன் காயம் ஏற்பட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதையும் படிங்க: திருப்பத்தூர் அருகே சாலை விபத்தில் 7 பெண்கள் பலி: பிரதமர் மோடி இரங்கல்; ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

முன்விரோதம் காரணமாக, இரண்டு தரப்பினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த புதுப்பட்டினம் காவல் நிலைய போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை அடுத்து விக்னேஷ் மற்றும் மணிமாறனை கைது செய்த புதுப்பட்டினம் போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், இது போன்ற தாக்குதல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட கண்காணிப்பாளரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: Chennai Crime: கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய ஓலா டிரைவர்... அண்ணன் கொலைக்கு காத்திருந்து பழி வாங்கிய தம்பி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.