நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அருகே திருவெண்காடு பஞ்சந்தாங்கி தெருவைச் சேர்ந்தவர், சந்திரசேகர் மகன் அருண்(26). இவர் டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வருகிறார். பக்கத்து ஊரில் உள்ள உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்றுவரும் வேளையில், அந்த வீட்டில் இருந்த 13 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
சிறுமிக்கு நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 2) வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், அவரது பெற்றோர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில் அருண் தொடர்ந்து 9 மாதகாலமாக சிறுமியை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அருண் மீது காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்து, கைது செய்து காவலில் அடைத்தனர்.