ETV Bharat / state

மினரல் வாட்டரில் புழுக்கள் - தண்ணீரை பருகிய குழந்தைகளுக்கு வாந்தி!

நாகப்பட்டினம்: புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு வாங்கிய மினரல் வாட்டர் பாட்டிலில் புழுக்கள் உயிருடன் மிதப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

author img

By

Published : Feb 8, 2020, 1:41 PM IST

Worms in Mineral water
Worms in Mineral water

நாகப்பட்டினம் அடுத்துள்ள கீச்சாங்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்காக, சட்டையப்பர் தெற்கு வீதியிலுள்ள உஷாதேவி என்ற கடையில் பிஸ்வின்ட் ( Bisvind) என்ற 300 எம்எல் அளவு கொண்ட மினரல் வாட்டர் பாட்டில்கள் வாங்கியுள்ளார்.

மூன்று பெட்டிகளில் 150 தண்ணீர் பாட்டில்கள் வாங்கிய மணிகண்டன், வீட்டின் நிகழ்ச்சியில் உணவு அருந்தியவர்களுக்கு தண்ணீர் கொடுத்துள்ளார். அந்த தண்ணீரை குடித்த குழந்தைகள் திடீரென வாந்தி எடுத்துள்ளனர்.

மினரல் வாட்டரில் உயிருடன் புழுக்கள்

இதனால் அதிச்சியடைந்த அவர்கள் பாட்டில்களை சோதனை செய்தபோது, ஒரு பாட்டிலின் உள்ளே புழு மற்றும் பூச்சுகள் உயிரோடு மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் சென்று கடை உரிமையாளரிடம், மணிகண்டனின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த தண்ணீர் பாட்டில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் தயாரிக்கப்பட்டது என்பது தெரியவந்தது. பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன், கடையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடை உரிமையாளர் உரிமம் இல்லாமல் தண்ணீர் கேன் விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.

மினரல் வாட்டரில் உயிருடன் புழுக்கள்

இதையடுத்து கடை உரிமையாளருக்கு இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த புகாருக்கு தண்ணீர் தயாரித்த நிறுவனம் அலட்சியமாக பதில் அளித்ததாகவும், தரமற்ற முறையில் குடிநீர் விற்பனை செய்துவரும் அந்த நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிங்க: பெற்ற குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை - தந்தைக்கு 40 ஆண்டுகள் சிறை

Intro:script in wrap

tn_ngp_08_purified_drinking_water_disorder_vis_7204630

Body:script in wrap

tn_ngp_08_purified_drinking_water_disorder_vis_7204630

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.