நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே நல்லவிநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசமூர்த்தி. இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளராக பணியாற்றிவருகிறார். இவருக்கும் காழியப்பபநல்லூரைச் சேர்ந்த தெட்சிணாமூர்த்தி மகள் வினோதாவுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்று தற்போது இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில், கணவர் வெங்கடேசமூர்த்தி வரதட்சணை கேட்டு வினோதாவை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். கொடுமை தாங்கமுடியாத வினோதா தந்தை வீட்டில் வசித்துவந்துள்ளார். கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் வெங்கடேசமூர்த்தி நேரில் சென்று வினோதாவை சமாதானப்படுத்தி அழைத்து வந்து குடும்பம் நடத்தியுள்ளார்.
இந்நிலையில், வினோதா தூக்கிட்டு இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்து பார்த்தபோது பெண்ணின் உடலை வைத்துவிட்டு வெங்கடேசமூர்த்தி குடும்பத்துடன் தலைமறைவானது தெரியவந்தது.
இது குறித்து, புதுபட்டினம் காவல் துறையிடம் வினோதாவின் தந்தை தெட்சிணாமூர்த்தி புகார் அளித்ததன்பேரில் காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமணைக்கு கொண்டுசென்றனர். பின்னர், தலைமறைவான வெங்கடேசமூர்த்தியை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க : வரதட்சணை கேட்டு நீதிபதி மருமகளை தாக்கிய விவகாரம்: வைரலாகும் சிசிடிவி காட்சி!