தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை, இஸ்லாமியர்களை தொடர்ந்து கைது செய்வதாகக் கூறி தமுமுகவினர் நாகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, இஸ்லாமியர்களை தொடர்ந்து குறிவைத்து கைது செய்யும் என்ஐஏ விற்கு கூடுதல் அதிகாரம் வழங்கி மசோதா இயற்றிய மத்திய அரசைக் கண்டித்தும், இஸ்லாமியர்களுக்கு எதிரான மசோதாவை தடை செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதையடுத்து, காவல்துறையினரின் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.