நாகப்பட்டினம்: தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு நாகை மாவட்டத்திலுள்ள நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், மயிலாடுதுறை மாவட்ட சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான 8ஆயிரம் வாக்கு இயந்திரங்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு, நாகை சேமிப்புக் கிடங்கில் துப்பாக்கி எந்திய காவலர்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்கு இயந்திரங்களின் முதற்கட்ட சோதனையை நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர், பெங்களூரு பெல் நிறுவன பொறியாளர்கள் 6 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது, வாக்கு இயந்திரங்களின் பேட்டரி, விவி பேடு கருவி, இயந்திரத்தின் தரம் உள்ளிட்டவை குறித்தும் ஊழியர்கள் கேட்டறிந்தனர்.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் கோயில் இடிப்பு: தமிமுன் அன்சாரி கடும் கண்டனம்!