ETV Bharat / state

தளபதி பாதையில் தம்பிகள் - சைக்கிளில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த விஜய் மக்கள் இயக்கத்தினர்

மயிலாடுதுறை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இருவர், ட்ரம்ஸ் வாத்தியங்கள் முழங்க, சைக்கிளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்பு மனு தாக்கல் செய்த விஜய் மக்கள் இயக்கம்

author img

By

Published : Feb 2, 2022, 3:22 PM IST

Updated : Feb 2, 2022, 3:32 PM IST

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிடுகின்றனர்.

அந்த வகையில் மயிலாடுதுறை நகராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இரண்டு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். முன்னதாக அருணா பெட்ரோல் பங்கு அருகிலிருந்து இருசக்கர வாகனங்கள் புடைசூழ வேட்பாளர்களை சைக்கிளில் பேரணியாக ஒரு கிலோ மீட்டர் தூரம் அழைத்து வந்தனர்.

தொடர்ந்து நகராட்சி அலுவலகம் அருகே ட்ரம்ஸ் வாத்தியங்கள் முழங்க விஜய் மக்கள் இயக்கத்தினர் புடைசூழ வந்த வேட்பாளர்கள் நகராட்சிக்கு உட்பட்ட 24ஆவது வார்டில் மாவட்ட மாணவரணித் தலைவர் பிரபாகரன் என்பவரின் தாயார் காமாட்சி என்பவரும், 26ஆவது வார்டில் 21 வயது பொறியியல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரியும் நகர துணைத் தலைவருமான முகமது ஆசிப் ஆகிய இருவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று வரை மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய இரண்டு நகராட்சிகளில் 32 பேரும், குத்தாலம், மணல்மேடு, தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோயில் ஆகிய நான்கு பேரூராட்சிகளில் 11 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

வேட்பு மனு தாக்கல் செய்த விஜய் மக்கள் இயக்கத்தினர்

அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யாத நிலையில், பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும், சுயேச்சையாகவும் பலர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நிதிநிலை அறிக்கை மக்களிடையே நம்பிக்கையினை உருவாக்கும் - ஓபிஎஸ்

Last Updated : Feb 2, 2022, 3:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.