நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' திரைப்படம் சமீபத்தில் 50ஆவது நாளை கடந்தது. திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் பிகில் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், நாகை வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நாகை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் குட்டி கோபி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கப்பட்டது.
அது தவிர பொதுமக்களுக்கு இலவசமாக வெங்காயமும் வழங்கப்பட்டது. இதை ஆர்வத்துடன் பொதுமக்கள் பலர் வாங்கிச் சென்றனர். வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், நாடு முழுவதிலும் வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் விஜய் ரசிகர்கள் இலவசமாக வழங்கிய வெங்காயத்தால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.