நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தில், சனி மற்றும் ஞாயிறு தினங்களில் எப்போதும் பக்தர்கள் அதிகமாக இருப்பார்கள். மேலும் இரவு நேரங்களில் வேளாங்கண்ணி பரபரப்பாக காணப்படும். தற்போது தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு, கடற்கரை மற்றும் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் வேளாங்கண்ணி ஆலயம் பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடற்கரையில் குளிப்பதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளதால் வேளாங்கண்ணி கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கவில்லை. கடற்கரையில் அத்துமீறி வருபவர்களை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணிநேர கண்காணிப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் கடற்கரை, பேருந்து நிலையம், தங்கும் விடுதிகள், கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.
இதையும் படிங்க: அமைச்சரவையில் எடுக்கப்பட்ட 6 முக்கிய முடிவுகள் என்னென்ன?