நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பாஜக, திராவிடர் கழகம், நாம் தமிழர் கட்சியினர், வழக்கறிஞர் சங்கத்தினர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ரயில் நிலையத்தில் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு ரயில்வே தொழிற்சங்கத்தினர் மரியாதை செலுத்தினர்.
இதேபோன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு உள்ள அம்பேத்கரின் உருவ சிலைக்கு, காங்கிரஸ், திமுக, அதிமுக, விடுதலை சிறுத்தைகள் உளிட்ட பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கலந்துகொண்டு சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி வட்டாட்சியர்கள் சீனிவாசன், பாண்டியராஜன் உள்ளிட்டோர் ஒன்றுகூடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.