மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் தருமபுர ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனுறை வைத்தியநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. நவகிரக ஸ்தலங்களில் முதன்மையான செவ்வாய் ஸ்தலமாக விளங்கும் இக்கோவிலில் முருகபெருமான் வள்ளி தெய்வானையுடன் செல்வ முத்துக்குமார சுவாமியாக தனி சன்னிதியில் அருள் பாலிக்கிறார்.
சித்த மருத்துவ தலைவரான தன்வந்திரி சுவாமிகள் எயதனித்தனி சன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர், இக்கோயிலில் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு ஆண்டு தோறும் தைமாத உத்ஸவ திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கிய நிலையில் நாள்தோறும் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். யானை வாகனம், வெள்ளி இடும்பன் வாகனம் ,காமதேனு வாகனம் என நாள்தோறும் வீதிஉலா தரிசனமும் நடைபெற்றது.
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை முன்னிட்டு வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் செல்வமுத்துக்குமாரசாமி எழுந்தருளினார்.
தேரோட்டத்தை வைத்தீஸ்வரன்கோவில் கட்டளை தம்பிரான் சுவாமிகள் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்,அதனை தொடர்ந்து திளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.கோவிலின் நான்கு வீதிகளை தேரில் வலம் வந்த முத்துகுமாரசுவாமிக்கு வீடுகள் தோறும் அர்ச்சனை செய்து,நேர்த்திக்கடன் செலுத்தியும் பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.
இதையும் படிங்க: பருவம் தவறிய மழையால் 1.27 லட்சம் ஹெக்டேர் பயிர் பாதிப்பு - அமைச்சர் தகவல்!