ETV Bharat / state

மதம் மாறியதாகக் கூறி தாய், மகன்கள் மீது கொடூரத் தாக்குதல்! - கிறிஸ்தவம்

நாகை: மதம் மாறியதாகக் கூறி தாய் அவரது மகன்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வன்கொடுமைத் தாக்குதல்
author img

By

Published : Jun 24, 2019, 8:50 PM IST

நாகை மாவட்டம் கோதண்டராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தென்கோவன். இவருக்கு வசந்தி என்ற மனைவியும், வசந்த கோவன், சாமுவேல் என்ற இரு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், இவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்திற்கு மாறினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தும், வீட்டைக் காலி செய்ய கூறியும் வலியுறுத்தினர். இந்நிலையில் சனிக்கிழமை (ஜூன் 22ஆம் தேதி) தென் கோவன் ஊரில் இல்லாத போது, அவரது வீட்டிற்கு வந்த ஒரு அடையாளம் தெரியாத நபர்கள் வசந்தியையும், அவரது இரு மகன்களையும் தாக்கி வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளனர்.

வன்கொடுமைத் தாக்குதல்

இது குறித்து திட்டச்சேரி காவல்நிலையத்தில் வசந்தி புகார் அளித்தும் காவல்துறையினர் ஊர் மக்களுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்காமல் வசந்தியை தரக்குறைவாக திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த வசந்தி இன்று (ஜூன் 24ஆம் தேதி) தனது இருமகன்களுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தனது மகன்கள் மீதும் அவரது உடல் மீதும் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொள்ள முயன்றார்.

அப்போது அங்கு பணியில் இருந்த காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணைக்காக நாகூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Intro:மதம் மாறியதாக கூறி தாய் மற்றும் இரு மகன்கள் மீது வன்கொடுமைத் தாக்குதல் - புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி.

Body:மதம் மாறியதாக கூறி தாய் மற்றும் இரு மகன்கள் மீது வன்கொடுமைத் தாக்குதல் - புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி.

நாகை மாவட்டம் கோதண்டராஜபுரம் கிராமத்தை சேர்ந்த தென்கோவன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர், இவருக்கு வசந்தி என்ற மனைவியும் வசந்த கோவன், சாமுவேல் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி வாரம் தோறும் சர்ச்க்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்ததால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம முக்கியஸ்தர்கள் ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து வந்ததாகவும், ஊரை காலி செய்ய சொல்லி வற்புறுத்தியதாகவும், கூறப்படுகிறது.

இந்த சூழலில், கடந்த சனிக்கிழமை தென் கோவன் ஊரில் இல்லாத போது, அவரது வீட்டிற்கு வந்த ஒரு கும்பல் வதந்தியை வீட்டை விட்டு காலி செய்யுமாறு வசந்தியையும் அவரது இரு மகன்களையும் தாக்கி உள்ளனர்.

இது குறித்து திட்டச்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் ஊர் மக்களுக்கு ஆதரவாக, வசந்தி புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வசந்தியை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த வசந்தி தனது இரு மகன்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாசல் முன்பு தனது மகன்கள் மீதும் தனது உடல் மீதும் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொள்ள முயன்றார், அப்போது ஆட்சி அலுவகத்தில் பாதுகாப்பில் நின்றிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணைக்காக நாகூர் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

இதனால் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

பேட்டி - வசந்தி

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.