ETV Bharat / state

சொகுசு காரை ஏமாற்றி அபகரித்தவர்கள் கைது - 2 person arrested

நாகப்பட்டினம்: சொகுசு காரை அடமானம் வைத்து தருவதாக கூறி காரை ஆறுமாத காலமாக அனுபவித்து டிமிக்கி கொடுத்து வந்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Car sales cheating
Car sales cheating
author img

By

Published : Jun 6, 2020, 10:58 PM IST

திருச்சி மாவட்டம் மாதா கோட்டையை சேர்ந்த பிரவின் குமார் என்பவர் சொந்தமாக லேத் பட்டறை நடத்தி வருகிறார்.

தொழில் நஷ்டம் காரணமாக தனது சொகுசு காரை அடமானம் வைக்க முடிவு செய்து, திருச்சி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த கலைமாறன் என்பவரது உதவியை நாடியுள்ளார்.

பின்னர் அவருக்கு உதவுவதாக கூறிய கலைமாறன் காரை ஐந்து லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்து தருவதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சொகுசு காரில் பிரவினை நாகூர் அழைத்து வந்து நிஜாம் என்பவரிடம் காரை ஒப்படைத்துள்ளார்.

அப்போது காரை பெற்றுக்கொண்ட நிஜாம் மறுநாள் வங்கியில் ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை அனுப்புகிறேன் காரை விட்டுவிட்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளார். நிஜாமின் பேச்சை நம்பி சென்ற பிரவின்குமாரை கடந்த ஆறுமாத காலமாக இருவரும் ஏமாற்றி காரை பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் நாகூர் காவல் நிலையத்தில் பிரவின்குமார் அளித்த புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் நாகூர் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் நிஜாமை கைது செய்து, சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து விசாரணை செய்ததில், கலைமாறனுக்கும், நிஜாமுக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்னையை தீர்க்க பிரவின் குமாருக்கு சொந்தமான சொகுசு காரை கலைமாறன் நிஜாமிடம் ஒப்படைத்தது போல் நாடகமாடியுள்ளனர் என்பது தெரியவந்தது.

இதையும் படிங்க: கஞ்சா விற்க திட்டம் தீட்டிய கும்பல் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.