மயிலாடுதுறை: கனமழைக் காரணமாக 20க்கும் மேற்பட்ட இடங்களில் மின்கம்பங்கள் உள்பட மரங்கள் வேரோடு சாய்ந்தன.
வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணி முதல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரவலாக இடி, மின்னல், காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
அப்போது, தில்லையாடி கிராமத்தில் இடி தாக்கியதில் தனசேகரன், பாலசுப்பிரமணியன் ஆகிய இருவர் படுகாயமடைந்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மன்னம்பந்தல், செருதியூர், மணக்குடி, மேலமருதாந்தநல்லூர், ஆனந்தகுடி, சங்கரன்பந்தல் ஆகிய இடங்களில் பலத்த காற்று காரணமாக 20க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன.
பின்னர், மின்வாரிய ஊழியர்கள் சரிசெய்து மின் இணைப்பு வழங்கினர். மேலும், பல்வேறு இடங்களில் பலத்த காற்று காரணமாக மரங்கள் வேரோடு விழுந்தன. இதில், நல்வாய்ப்பாக யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இந்நிலையில், மயிலாடுதுறை 9மிமீ, மணல்மேடு 4மிமீ, சீர்காழி 26.40மிமீ, கொள்ளிடம் 55மிமீ, தரங்கம்பாடி 16.30மிமீ, தரங்கம்பாடி 16.30மிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: கோவின் செயலி: கோவிட் தடுப்பூசி சான்றிதழில் திருத்தம்